பாவனா திருமணம் புத்தம் புது தகவல்

முதலில் மலையாளத்தில் அறிமுகமாகி, பின்னர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பாவனா. குடும்ப பாங்கான
கதாபாத்திரங்களோடு கவர்ச்சி வேடங்களிலும், பட்டையை கிளப்பினார். இவரது, வேகமான முன்னேற்றம், அப்போது, கோலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது கொஞ்ச காலம் மட்டுமே.. அதன்பின் கடந்த சில வருடங்களாக தமிழும் மலையாளமும் தன்னை கைவிட்டபிறகு கன்னட திரையுலகில் ஐக்கியமாகி சில படங்களில் நடித்து வந்தார் பாவனா. அப்போதுதான் பாவனாவுக்கும் ஒரு கன்னட தயாரிப்பாளருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இருவீட்டார் தரப்பிலும் திருமண பேச்சும் நடைபெற்றுவிட்டது. அதன்படி கடந்த வருடமே பாவனாவின் திருமணம் நடந்திருக்க வேண்டியது. ஆனால் பாவனாவின் தந்தை திடீரென காலமாக, அந்த அதிர்ச்சியில் மனம் உடைந்து போனார் பாவனா. அதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தபின் திருமணத்தை நடத்தலாம் என இரண்டு வீட்டாருமே முடிவு செய்தனர். அதன்படி வரும் ஏப்ரல் மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். மறைந்த பாவனாவின் தந்தை, பாவனாவின் திருமணத்தை விமரிசையாக நடத்த விரும்பினாராம். ஆனாலும் மற்ற நட்சத்திரங்களைப்போல ஆடம்பரமாக இல்லாமல் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபிசில் வைத்து திருமணத்தை நடத்த பாவனா விரும்பியதால், அப்படியே நடத்த முடிவுசெய்துள்ளார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget