பூர்ணாவின் வருங்கால மணவாளன்

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த பூர்ணா, தான் நடித்துள்ள 'சவரக்கத்தி' படத்தை தற்போது
ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.. மனம் நிறைவான கேரக்டர் ஒன்றில் நடித்துவிட்டுத்தான் திருமணம் பற்றி நினைப்பேன் என்று கூறிய பூர்ணாவுக்கு இப்போதே 32 வயதாகிவிட்டது.. வீட்டில் மிக தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.. ஆனால் மாப்பிள்ளை அவரது சொந்த ஊராகிய கேரளாவிலோ அல்லது பிழைக்க வந்த ஊரான தமிழ்நாட்டிலோ இல்லையாம்.. மாப்பிளை தேடும் படலம் நடப்பது வட இந்தியாவில் தானாம்..

தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துவிட்ட பூர்ணாவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்காவிட்டாலும் கூட மிகவும் பிடித்தமான ஏரியா வட இந்தியா தானாம். அவரது மணவாளனும் ஒரு வட இந்தியராகத்தான் இருக்கவேண்டும் என்பது அவரது ஆசை.. பூர்ணா திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாலே போதும் என நினைத்த அவரது பெற்றோர் அவரது ஆசைக்கு பச்சைக்கொடி காட்டியதோடு, தீவிரமாக மாப்பிள்ளை தேடியும் வருகிறார்கள்..

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால், அதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் திருமணம் நடத்திவிடவும் தயாராக இருக்கிறார்களாம். அதனால் எனது திருமணம் குறித்த அறிவிப்பை நானே முறையாக அறிவிப்பேன்.. அதுவரை கிசுகிசு எதுவும் வேண்டாம் என கேட்டுக்கொண்டுளார் பூர்ணா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget