கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, சில படங்களில் சிவகார்த்திகேயன், அதர்வா போன்ற இளவட்ட நடிகர்களுடனும் நடித்து வருகிறார். இந்த
படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நயன்தாரா, அறம் படத்தில் கலெக்டர், இமைக்கா நொடிகளில் காவல்துறை அதிகாரி என கெத்தான வேடங்களில் நடிக்கிறார். இதில் அறம் படத்தில் ஒரேநாளில் நடக்கும் கதையில் நடித்துள்ள நயன்தாரா, 45 நாட்களாக நடித்துள்ளார். என்றாலும், எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரேமதிரியான பர்பாமென்ஸை படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
அதேபோல், இமைக்கா நொடிகள் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 4 வயது குழந்தைக்கு அம்மாவான அவருக்கு தம்பியாக அதர்வா நடிக்கிறார். அந்த வகையில், நயன்தாராவை சுற்றி கதை பின்னப்பட்டுள்ள நிலையில், அவருக்கு செண்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். என்றாலும், அந்த காட்சிகளில் அதிகப்படியான கண்ணீரை வெளிப்படுத்தி நடிக்காமல், காவல் துறைக்கே உரிய கம்பீரத்துடன் நடித்திருக்கும் நயன்தாரா, அழுது நடிக்க வேண்டிய சில காட்சிகளில்கூட கலக்கத்தை மட்டுமே முகத்தில் வெளிப்படுத்தி நடித்துள்ளாராம்.

கருத்துரையிடுக