தமிழ் சினிமாவுக்கு வந்தால் கட்டாயம் முன்னணி நடிகையாகிவிடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் கேரளாவில் இருந்து இளவட்ட நடிகைகள்
கோலிவுட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்படி வந்த அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின், லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகள் பெரிய அளவில் புகழ் பெற்றனர். இவர்களில் நயன்தாரா 30 வயதை கடந்த பிறகும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
இவர்களைப்போல்தான் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் அறிமுகமான பிரயாகாவும் பெரிய நம்பிக்கையுடன் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார். பெரிய டைரக்டர் படம் என்பதால் தனக்கு பெரிய ரீச் கிடைக்கப் போகிறது என்று அந்த படத்தில் உயரமான கட்டிடத்தில் ரோப்பில் தொங்கியபடியெல்லாம் பேய் கெட்டப்பில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் அவரது நிஜ கெட்டப்பில் ஒரேயொரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். அந்த காட்சியிலேயே அவர் இறந்தும் விடுவார். அதனால் அந்த படத்தில் பிரயாகாவின் நடிப்பும், அவரது முகமும் தமிழ் ரசிகர்களை கவரவில்லை.
அதேபோல், அதற்கடுத்தும் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது. ஆனால் சமீபத்தில் மீண்டும் பிரயாகாவை ஒரு தமிழ்ப்படத்தில் பேயாக நடிக்க அழைத்தனர். ஆனால், பேயாக வந்து பழிவாங்க வேண்டும் என்றதுமே, மேக்கப்போட்டு என் முகத்தையே மறைத்து விடுவீர்கள். அப்படியென்றால் இதுவும் இன்னொரு பிசாசு படமாகி விடும் என்று சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்ட பிரயாகா, மலையாளத்தில் சில படங்களில் நடித்தபோதும், திருப்தியான வேடங்களில் நடிக்கிறேன். இப்போதைக்கு அதுவே போதும் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

கருத்துரையிடுக