தமிழில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் உள்பட சில தொடர்களில் நடித்து வந்த நளினி, தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து
வந்தார். அதனால் ஒருகட்டத்தில் ஆந்திராவிலேயே வீடு பிடித்து செட்டிலாகி விட்ட அவர், தமிழ் சீரியல்களில் நடிக்கும்போதுமட்டும் சென்னைக்கு வந்து சென்றார். தற்போது ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் டார்லிங் டார்லிங் -என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் நளினி மாமியார் வேடத்தில் நடிக்கும் ஒரு தொடரில் அவரை மையமாக வைத்தே கதை உருவாகியிருக்கிறதாம். ஏற்கனவே அவர் நடித்த தொடர்களில் அவரது கேரக்டர் அங்கு பெரிய அளவில் ரீச்சாகியிருப்பதால், குடும்பப் பெண்கள் மத்தியில் நளினிக்கு பெரிய ரசிகை வட்டமே உள்ளதாம்.
இதனால் இப்போது நடிக்கும் தொடருக்கு பிறகு தெலுங்கு சீரியல் உலகில் இன்னும் பெரிய நடிகையாகி விடுவாராம் நளினி. அதனால் தற்போது தமிழை விட தெலுங்கில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வரும் நளினிக்கு, தெலுங்கு படங்களிலும்கூட கேரக்டர்கள் கிடைத்து வருகிறதாம். இருப்பினும், தமிழ் நாட்டையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஏதேனும் ஒரு தொடரில் முகம் காட்டிக்கொண்டிருக்கவும் திட்டமிட்டுள்ளாராம் நளினி.

கருத்துரையிடுக