நாயகி, மோகினி படங்களைத் தொடர்ந்து திரிஷா லீடு ரோலில் நடித்து வரும் படம் கர்ஜனை. சுந்தர்.பி இயக்கும் இந்த படத்தில் திரிஷாவுடன் மோதும் அதிரடி வில்லனாக தெலுங்கு நடிகர் வம்சி
கிருஷ்ணா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சீரியல் நாயகி அகிலா நடித்து வருகிறார்.
இதுபற்றி அகிலா கூறுகையில், நான் தாமரை, இனி இனிய தோழியே, பொன் னூஞ்சல், தேவதை, ராமானுஜம் என பல மெகா சீரியல்களில் நடித்துள்ளேன். தற்போது ராஜ் டிவிக்காக ஷ்யாமளா -என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறேன். இதுதவிர சினிமாவிலும் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது கர்ஜனை படத்தில் வில்லனாக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்த படத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்தபோதும், கவனிக்கப்படும் வேடத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த கர்ஜனை படத்திற்கு பிறகு எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறும் அகிலா, சீரியல்களில் லீடு ரோல்களிலும் நடித்த போதும் சினிமாவில் ஓரளவு பேசப்படும் கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக சொல்கிறார்.

கருத்துரையிடுக