வெள்ளித்திரையில் கர்ஜிக்கும் த்ரிஷா

கடந்த 15 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு கடந்த சில வருடங்களாகவே இறங்குமுகம் தொடங்கிவிட்டது. குறிப்பாக அவரது திருமண அறிவிப்பு வெளியானது முதல் முன்னணி
ஹீரோக்களின் சிபாரிசு பட்டியலில் த்ரிஷாவின் பெயர் இல்லை. எனவே இனி ஹீரோக்களை நம்பினால் காலம் தள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, சமீபகாலமாக வழக்கமான ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையில் தனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கொடி' படத்திற்கு அடுத்ததாக விரைவில் வெளியாகவிருக்கும் 'மோகினி' படத்தில் த்ரிஷாவுக்கு முக்கியமான கேரக்டர்தான். ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிக்கும் படம் 'கர்ஜனை'.

அனுஷ்கா ஷர்மா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'NH-10' படத்தின் தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக டிவி நடிகர் அமித் பார்கவ் நடிக்கிறார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். சுந்தர் இயக்கி வரும் ரோட் மூவியான இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படம் தவிர த்ரிஷா கைவசம் இப்போது 'சதுரங்கவேட்டை-2', '96', 'ஹே ஜூட்' (மலையாளம்), 18:18 ஆகிய படங்களும் இருக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget