நிக்கி காட்டில் அடைமழை

டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி காட்டில் இப்போது அடை மழை. யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு
படங்களில் நடித்தார். இது தவிர தெலுங்கு மற்றும் மலையாள படத்திலும் பிசியாக நடிக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, மரகத நாணயம், கீ உள்பட 4 படங்கள் கையில் உள்ளது. இந்த நிலையில் விக்ரம் பிரபு ஜோடியாக பக்கா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே நெருப்புடா படத்திலும் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் நிறுவனத்தின் சார்பில் டி.சிவகுமார் தயாரிக்கும் பக்கா படத்தை பேரரசுவின் உதவியாளர் எஸ்.எஸ்.சூர்யா இயக்குகிறார். சூரி, சதீஷ், ஆனந்தராஜ், சிங்கம்புலி, சிங்கமுத்து, மயில்சாமி உள்ளிட்ட காமெடி கூட்டணியும் நடிக்கிறது. சி.சத்யா இசை அமைக்கிறார், சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

"இது பக்கா கமர்ஷியல் மற்றும் ஜாலியான படம். கிராமத்து கதையான இது, முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கலகலப்பான காமெடி இருக்கும். படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது" என்றார் எஸ்.எஸ்.சூர்யா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget