சொந்த குரலில் அசத்தும் நயன்தாரா

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் அறம். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடந்து முடிந்து விட்டது. தற்போது இறுதிகட்ட பணிகள்
தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எடிட்டிங் பணிகள் முடிவடைந்து டப்பிங்கை தொடங்கியிருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நடிக்கும் நயன்தாரா, அந்த கதாபாத்திரத்தில் பொறுப்பை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

மேலும், இந்த படத்தின் கதை ஒரே நாளில் நடிப்பது போல் படமாக்கப்பட்டி ருப்பதால் படத்தில் நடித்த நயன்தாரா உள்பட அனைத்து கேரக்டர்களுமே ஒரேயொரு காஸ்டியூம் அணிந்துதான் நடித்துள்ளனர். அந்த வகையில், படப்பிடிப்பு நடைபெற்ற 50 நாட்களும் ஒரே காஷ்டியூம்தான் அணிந்து நடித்திருக்கிறார்கள். அதோடு, தனது கலெக்டர் வேடத்தில் சின்னசின்ன மாறுதல்கூட தென்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு வந்ததும், முந்தின நாள் நடித்த காட்சிகளை பார்த்து விட்டு அதே மூடுக்கு தன்னை முழுமையாக கொண்டு வந்து நடித்து வந்த நயன்தாரா, நானும் ரெளடிதான் படத்தைப்போலவே இந்த அறம் படத்திலும் சொந்த குரலிலேயே டப்பிங் பேசுகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget