கோலிவுட்டை கலக்கும் பெங்காலி புயல் மிஷ்டி

இந்தி, பெங்காலி, தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு அதர்வாவின் செம போத ஆகாத படம் மூலம் தமிழுக்கு வந்தவர் பெங்காலி நடிகை மிஷ்டி. இந்த படத்தில் வழக்கமான நாயகியாக
இல்லாமல் அழுத்தமான ஒரு வேடத்தில் நடித்திருக்கும் மிஷ்டி, மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பர்பாமென்ஸ் குறித்த செய்திகள் கோலிவுட்டில் பரவியதை அடுத்து ஆதம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார் மிஷ்டி.

அதோடு, இவர் தனுஷின் தீவிரமான ரசிகையாம். அவர் நடித்த சில படங்களைப்பார்த்த பிறகு ரசிகையான அவருக்கு தனுசுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளதாம். அதற்கான முயற்சிகளை அவர் எடுத்து வந்தபோது, தமிழில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் தனுசுடன் நடிக்க உடனடியாக வாய்ப்பு கிடைக்காதபோதும் அவர் நடித்த படத்தின் ரீமேக்கிலாவது முதலில் நடிப்போம் என்று அந்த படத்தில் கமிட்டாகி நடித்து வரும் மிஷ்டி, செம போதை ஆகாத படம் திரைக்கு வந்த பிறகு தனுசுடன் இணைந்து நடிப்பதற்கான நேரடி முயற்சியில் இறங்கப்போகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget