பாதாம் பிரியாணி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பார்லி - 1/2 கப்

பிரவுன் அரிசி - 1/2 கப்

கம்பு - 1/2 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய பூண்டு - 1 டீ ஸ்பூன்

நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன்

நறுக்கிய கேரட் - 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

பொடித்த மிளகு - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - ருசிக்கு

சீரகம் - 1 டீ ஸ்பூன்

மல்லித் தழை - சிறிது

பாதாம் - 1/4 கப்

தண்ணீர் - 7 கப்

செய்முறை

பாதாமை வெந்நீரில், 10 நிமிடங்கள் ஊற வைத்து, தோல் நீக்கி வைக்கவும். அரிசி, கம்பு, பார்லியை கழுவி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.அடி கனமான பாத்திரத்தில், நெய் சேர்த்து, சீரகம் போட்டு வெடித்ததும், இஞ்சி, பூண்டு, மிளகாய் வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதன்பின், நறுக்கிய கேரட் சேர்த்து, உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.கேரட் பாதி வெந்ததும், ஊறிய தானியங்களை நீர் வடித்து சேர்த்து, தண்ணீர் விட்டு, பாதாம் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். நீர் முழுதும் வற்றி, தானியங்கள், பாதாம் வெந்ததும், மல்லித் தழை துாவி, சூடாகப் பரிமாறவும். தண்ணீருக்கு பதில், நான்கைந்து காய்கறிகளை வெட்டி போட்டு, போதுமான அளவு நீர் விட்டு, வேக வைத்த நீரை சேர்த்தால், கூடுதல் ருசியாக இருக்கும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget