மசாலா இட்லி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - ஒரு பெரிய கப்

பட்டாணி - 1/2 கப்

உருளை கிழங்கு - 2 (பெரியது)

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக் கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மசித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும். கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.

இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

Vegetable stuffed idli recipe | Paneer stuffed idli recipe | Egg stuffed idli | Coconut stuffed idli | Chutney stuffed idli | Stuffed idli Kitchen | Stuffed Idli roll | Stuffed idli recipe in marathi | Stuffed idli recipe in tamil |

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget