கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள்.

தேவையானவை: 

கேரட் - 6
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி - 1 துண்டு
வெண்ணை - 1 ஸ்பூன்
சோள மாவு - 1/2 ஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு ,மிளகு தூள் - தேவைகேற்ப 

செய்முறை:


  • வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும்.
  • சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும்.
  • இந்த‌க் கலவையை மூடியால் மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.