Articles by "ஐஸ் க்ரீம்"

கிவி ஐஸ்க்ரீம் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த கிவி ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஜிகிர்தண்டா சாப்பிட மதுரைக்கு போக வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய முறையில் ஜிகர்தண்டாவை செய்யலாம். இப்போது ஜிகர்தண்டாவை எப்படி செய்வது என்று

தேவையான பொருட்கள்

முலாம்பழம் (சுமாரான அளவு) - ஒன்று ,
பால் - 1 1/2 லிட்டர் ,
சர்க்கரை -1 கப் ,
கஸ்டர்ட் பவுடர் - 1 1/2 tspதேக்கரண்டி ,
வெனில்லா எஸ்ஸென்ஸ் - 3 (அ) 4 சொட்டு .


செய்முறை

முதலில் கஸ்டர்ட் பவுடரையும், சர்க்கரையையும் 2 கப் 

பச்சைப் பாலில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். மீதிப் 

பாலை நன்றாகக் காய்ச்சி அதில் சர்க்கரைக் கலவையைச் 

சேர்த்து மேலும் கொதிக்க விடவும். பின் கீழே இறக்கி நன்றாக 

ஆறிய பின்னர் ட்ரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 

வைக்கவும்.

முலாம்பழத்தைக் கழுவித், தோல் சீவி, விதைப்பகுதியை நீக்கி 

விட்டுச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு மணி நேரம் 

கழித்து குளிர வைத்த பாலுடன் பழத் துண்டுகளைச் சேர்த்து 

மூன்று நான்கு நிமிடங்கள் மிக்சியில் அடிக்கவும். மூன்று 

நான்கு சொட்டுகள் வெனில்லா எஸ்ஸென்ஸ் விட்டு 

நன்றாகக் கலக்கி விடவும்.

மீண்டும் ட்ரேயில் கொட்டி ஐஸ்கிரீம் தயாரானதும், துண்டுகள் 

போட்டு, மேலே சீவிய முந்திரி, ,பாதாம்மி பருப்பு கொண்டு 

அலங்கரிக்கவும்.

தேவையான பொருட்கள்

சீனி - 6 - 7 மேசைக்கரண்டி
கோன்பிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
கட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டி
பால் - 1 கப்


செய்முறை

4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும்.
சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும்.

காரமெல் கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.

கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும்.

பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.

கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.

சுவையான காரமெல் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில் காரமெல் வழிந்து பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைத் தரும்

குறிப்பு:
விரும்பினால் பரிமறும் வரை புடிங் கிண்ணத்தை ஃபிரிட்ஜில் வைத்து குளிர விட்டும் எடுக்கலாம். காரமேலில்/கட்டிப்பாலில் உள்ள இனிப்பு சுவை போதும் என நினைப்பவர்கள் புடிங் காய்ச்சும் போது சீனி சேர்க்க வேண்டாம். 

தேவையான பொருட்கள்

ஜெல்லி பவுடர் - 100 கிராம்
ஐசிங் சுகர் - 300 கிராம்
பால் - 1 1/2 லிட்டர்
ப்ரெஸ்க்ரீம் - 300 - மில்லி
செர்ரி பழம் - 100 கிராம்

வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி

செய்முறை

முதலில் பாலைக்கொதிக்கவைத்து நன்கு வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவேண்டும்.

ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

ஆறியபின் ஆறிய பாலில் ஜெல்லி கலவையை வடிகட்டி சேர்க்கவும்.பின் ஐசிங்சுகர்,க்ரீம்,எசன்ஸ்,செர்ரி சேர்த்து நன்கு கலக்கி ஐஸ் கப்புகளில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

தேவையான பொருட்கள்

கோன் ஃபிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
பால் - 1 கப்
பிடித்த எஸன்ஸ் - 1 தேக்கரண்டி (அன்னாசி, ரோஸ், மாம்பழம், ஸ்டிராபெர்ரி etc)


செய்முறை

கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.

மீதிப்பாலை நன்கு காய்ச்சவும்.

இதனுள் எஸன்ஸ், கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.

கலவை சிறிது தடித்ததும் புடிங் கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.

சுவையான கோன் ஃபிளவர் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில், என்ன எஸன்ஸ் புடிங்கிற்கு விட்டீர்களோ அதே பழ ஜூஸினுள் சிறிது சீனி கலந்து ஊற்றியும் பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்

பால் -- 1 லிட்டர்
கோக்கோ -- 4 டீஸ்பூன்
சாக்லேட் எசன்ஸ் -- 4 துளி
சர்க்கரை -- 1/2 கிலோ



செய்முறை

பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும்.

அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.

10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

தேவையான பொருட்கள்

பால் - 1லிட்டர்
சீனி - (தேவைக்கு)
சேமியா - 10கிராம்
ஜவ்வரிசி-3ஸ்பூன்
துளசி விதை -10கிராம்
ஜெல்லி- 1 பேக்

ரோஸ் மில்க் கலர் - 2 சொட்டு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜெல்லியினை போட்டு சூடு செய்யவும். நன்றாக ஜெல்லி கரைந்த பின்பு அடுப்பை ஆஃப் செய்து ஆறிய பின்பு ஃப்ரிஜில் வைக்கவும்.

ஒரு கண்ணாடி கப்பில் முதலில் கட் செய்த ஜெல்லி,அதன் மேல் ஐஸ் கீரீம் அதன் மேல் பால் கலவையினை ஊற்றவும்.

சுவையான குளூ குளூ பலூடா ரெடி.
குறிப்பு ஜெல்லிக்கு பதிலாக கடல்பாசியும் போடலாம்

பிறகு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் சேமியா,துளசி விதை, ஜவ்வரிசி போட்டு நன்றாக காய்ச்சவும்.

இதனுடன் சீனி, ரோஸ் கலர் சேர்த்து கிளறவும்.
நன்றாக ஆறியவுடன் ஃப்ரிஜில் வைக்கவும்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 2
பட்டர் - 2 தே. கரண்டி
வனிலா ஐஸ் க்றீம்- 2 ஸ்கூப் (scoop)


செய்முறை

வாழைப்பழத்தை தோலுரித்து வட்டமாக வெட்டவும்.

வாணலியில் பட்டர் போட்டு உருகியதும் வெட்டிய வாழைப்பழத்தை அதனுள் போடவும்.

வாழைப்பழம் நிறம் மாறியதும் எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் போடவும்.
அதன் மேல் வனிலா ஐஸ் கீறீம் போட்டு பரிமாறவும்.

தேவையான பொருட்கள்

பால் -- 1 லிட்டர்
கார்ன் ப்ளார் -- 50 கிராம்
சர்க்கரை -- 1கப் (பொடித்துக் கொள்ளவும்)

க்ரீம் -- 1கப்
ரோஸ் எசன்ஸ் -- 6 துளி
ஏலக்காய் பொடி -- சிறிதளவு
முந்திரி, பாதாம்,பிஸ்தா -- 2 டேபிள்ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)

செய்முறை

பாலை காய்ச்சி பாதி அளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃப்ளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.

மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.

அரைத்த விழுதுடன் க்ரீம்,எசன்ஸ்,ஏலக்காய் தூள்,பருப்பு வகைகள் கலந்து குல்பி மோல்டில் நிரப்பி ப்ரீசரில் வைக்கவும்.

கெட்டியானதும் எடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

முந்திரி பருப்பு-10
முட்டை-1
தேங்காய் பால்-2கப்
சர்க்கரை(சீனி)-1கப்
ஏலக்காய் பொடி-1சிட்டிகை


செய்முறை

முந்திரி பருப்பை பொடித்து கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்கவும்.

சீனியை பொடிக்கவும்.

முட்டையை நன்றாக அடிக்கவும்.

முட்டையுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அடித்து குக்கரில் வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும்.

குறிப்பு

சூடாகவும் சாப்பிடலாம்.குளிர வைத்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும். இனிப்பு அதிகமாக விரும்புபவர்கள் சீனி 1 1/2 

கப் சேர்க்கலாம். தேங்காய் பாலுக்கு பதிலாக பாலும் சேர்க்கலாம்.இரண்டும் கலந்தும் செய்யலாம். 

தேவையான பொருட்கள்   

கேரட் - 4
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
பிஸ்தா பருப்பு - 8

வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
     
ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
    
அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
    
குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.

தேவையான பொருட்கள்
பால் - நான்கு கப் 
மிக்ஸ்ட் புரூட்ஸ் - இரண்டு கப் 
ஆப்பில், பைனாப்பில், ஸ்ராபெர்ரி, மாம்பழம், வாழைபழம், கருப்பு திராட்சை பாதம் - ஐந்து 
கஸ்டர்ட் பவுடர் - ஒரு மேசை கரண்டி 
கண்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி 

சர்க்கரை - தேவைக்கு 
குங்குமபூ - நால் இதழ் 
ஜெல்லி - ஒரு கப் 
ஐஸ்கிரீம் - தேவைகு 

செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சவும். ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆறவைத்து அதில் கண்டெஸ்ட் பவுடரை கலக்கவும். சூடானா பாலில் கலக்கினால் கொத கொத என் ஆகிவிடும். கலக்கியதை சூடானா பாலில் சாப்ரானையும் போட்டு(குங்கும பூ) கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சனும். அப்படியே கட்டி யாகி கொண்டே வரும். கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதால்.சிறிது சர்க்கரை சேர்த்தால் போதும். இந்த கட்டியாக காய்ச்சியதை நல்ல ஆறவிடனும். அதற்குள் பாதத்தை வெண்ணீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக கட் பன்ன்வும். இப்போது பாதம் கடென்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும். ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும். பழங்களை ஒரே சீராக பொடியாக கட் பண்ணவும். ரெடிமேட் ஜெல்லி வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை வீட்டிலேயே செய்யலாம். ஐஸ்கிரிம் ஏதாவது பிளேவரில் அதையும் வைத்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முதலில் காய்ச்சிய கட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய குழிகரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழகலவை, ஒரு ஸ்க்யுப் ஐஸ்கிரிம், கொஞ்சமா ஜெல்லி வைத்து பறிமாறவும். ஒன்றும் மிஞ்சாது.

தேவையான பொருட்கள்

மில்க்மெயிட்-1
ரின் தண்ணீர்- 2
ரின் ஜெலற்றீன் -1 மே.க 
வனிலா எசன்ஸ் - 3 மே.க 
சீனி ருசிக்கேற்ப 


செய்முறை : ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும். வனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபீரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும். மீண்டும் ஃபீரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.

தேவையான பொருட்கள்

பால் - 500 மில்லி 
கோகோ பவுடர் - 6 மேசைக்கரண்டி 
சாக்லேட் எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி 
சர்க்கரை பவுடர் - 50 கிராம் 
ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்கரண்டி 


செய்முறை : முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.

தேவையான பொருட்கள் 

பால் - 500 மில்லி 
சர்க்கரை - 125 கிராம் 
முட்டை - 3 
ஸ்டர்டு பவுடர் - 5 மேசைக்கரண்டி 
ப்ரெஸ் க்ரீம் - 5 மேசைக்கரண்டி 
வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி 


செய்முறை : முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாகவைக்கவும். மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும். பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும். பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget